ETV Bharat / state

OPS: "டெங்கு காய்ச்சல் பரவலை உடனே தடுங்க" - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் - சிறுவன் செல்வன் ரக்ஷன் டெங்குவால் மரணம்

TN Dengue Fever: சென்னையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

OPS news release
ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 7:01 PM IST

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவுதை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோயான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதன்மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

  • டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்திக் கொள்கிறேன். pic.twitter.com/0Vh5w6fABm

    — O Panneerselvam (@OfficeOfOPS) September 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக சென்னை, மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் நான்கு வயது மகன் செல்வன் ரக்ஷன் நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளான் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மதுரவாயல் பகுதியில் குடிநீர் வசதி சரிவர செய்து தரப்படவில்லை என்றும், மாநகராட்சி லாரிகள்மூலம் அளிக்கும் தண்ணீரை பிடித்து வைத்து பல நாட்களுக்கு பயன்படுத்தும் அவல நிலை அப்பகுதியில் நிலவுவதாகவும், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகியுள்ளதால், அப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சென்னை மாநகாராகட்சியிடம் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை" குற்றம்சாட்டினார்.

மேலும் சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம் என்று அப்பகுதி மக்கள் தெவிக்கின்றனர். திமுக அரசின் அலட்சிய போக்கு கடும் கண்டனத்திற்க்குரியது. திமுக அரசின் அலட்சிய போக்கினால் சிறுவன் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தான் வெளியிட்ட அறிக்கையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் டெங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், மேலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், "டெங்கு என்பது ஒருவகை தொற்று நோய் என்பதையும், அண்டை மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யவும், கழிவுநீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், நோயின் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்குரிய சிகிச்சையினை அளித்து, நோய் நீங்குவதற்கான மருத்துவத்தினை செய்யவும், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு என்ற நிலை உருவாவதை தடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் எ.வ.வேலு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.