திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 77 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இது குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடுக்காட்டுப்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதும் முழுவீச்சில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு அமைச்சர்கள் குழு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, தேசிய பேரிடர் மீட்புப்பணிக் குழு, மாநில பேரிடர் மீட்புப் பணிக் குழு, தீயணைப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த் துறை போன்ற பல துறைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றன.
துளைபோடும் பகுதியில் மிகவும் கடுமையான பாறைகளாக இருப்பதால் துளையிடுவது சற்று சிரமமாக உள்ளது. ஒருமணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 10 அடி ஆழம் துளையிடும் நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன. குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக விரைவில் மீட்பதற்குண்டான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுஜித்தை மீட்க 2 பஞ்சாப் விவசாயிகள் வருகை!