ETV Bharat / state

ஜெயலலிதா நினைவிடம் அருகே ஓபி.எஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி.. சூடு பிடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்! - OPS supporter tried to set fire

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான போட்டி நிலவி வரும் நிலையில், ஜெயலலிதா நினைவிடம் அருகே ஓபி.எஸ் ஆதரவாளர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் அருகே ஓபி.எஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி.. சூடு பிடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்!

author img

By

Published : Jun 22, 2022, 7:56 AM IST

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட நுழைவு வாயிலில் நேற்று இரவு 9.30 மணியளவில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென ஓ.பி.எஸ் தான் அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, திடீரென அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோலை பறித்து தண்ணீர் ஊற்றி அண்ணாசதுக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தீக்குளிக்க முயன்ற நபர் தேனாம்பேட்டை வரதராஜபுரத்தை சேர்ந்த கேசவன்(33) என்பதும் அதிமுக தென்சென்னை வடகிழக்கு மாவட்ட இணை செயலாளராக இருந்து வருவதும் தெரியவந்தது.

ஜெயலலிதா நினைவிடம் அருகே ஓபி.எஸ் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி.. சூடு பிடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்!

ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஓபி.எஸ் ஆதரவாளர் ஜெயலலிதா நினைவிடம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது - காவல் துறைக்கு ஓபிஎஸ் மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.