ETV Bharat / state

‘நீட்’ ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ‘நீட்’ தேர்வு ரத்து என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : Sep 16, 2021, 5:19 AM IST

சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு ரத்து செய்ய திமுக இறுதிவரை போராடும் என்று முதலமைச்சர் அறிவித்து இருப்பதைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சனை இப்போது முடிவுக்கு வராது என்பது சூசகமாகத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுதான் அதன் தலைவர்கள் தேர்தலின்போது மேடைக்கு மேடை முழங்கினார்கள்.

அதை நம்பித்தான் திமுகவிற்கு மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக என்ன வழியைப் பின்பற்றியதோ அதே வழியைத்தான் திமுகவும் பின்பற்றி இருக்கிறது. அதாவது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இந்த வாதத்தை அதிமுக முன்வைத்தால், இதற்காக குழுவை அமைத்து, அதன் பிறகு தான் சட்டமுன்வடிவினை நிறைவேற்றினோம் என்று திமுக கூறக்கூடும். ஆனால், அந்தக் குழுவிற்கு எந்த சட்ட அங்கீகாரமும் கிடையாது. வெறும் சம்பிரதாயத்திற்காக இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றே மக்கள் கருதுகிறார்கள்.

முதலமைச்சர் சட்டப் போராட்டத்தை அரசு தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது, அவருக்கே இந்தச் சட்டமுன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.

அடுத்தபடியாக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்பக் கொண்டு வர திமுக நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை நடுவில் 13 மாதங்கள் தவிர, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி திமுக.

இன்னும் சொல்லப்போனால் திமுகவின் தயவில்தான் மத்திய அரசுகளே இருந்தன. அப்பொழுதெல்லாம் மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மத்திய அரசில் அங்கம் வகிக்காத சூழ்நிலையில், 'கல்வி'யை மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம்.

தற்போது திமுக கூட்டணிக்கு 38 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் வர உள்ளன . இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசிற்கு தேவையான அழுத்தம் கொடுத்து, 'நீட் தேர்வு ரத்து' என்ற அறிவிப்பினைச் செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’சேப்பாக்கம் சேகுவேரா...’ - உதயநிதியைத் தாக்கும் ஜெயக்குமார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.