சென்னை: வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் , மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த நிரந்தர பொதுச் செயலாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து ஓ பன்னீர்செலவத்தின் படம் நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மட்டும் இருக்கும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அவரை பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளது.
-
#NewProfilePic pic.twitter.com/Y3ixT6C3hU
— AIADMK (@AIADMKOfficial) July 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#NewProfilePic pic.twitter.com/Y3ixT6C3hU
— AIADMK (@AIADMKOfficial) July 11, 2022#NewProfilePic pic.twitter.com/Y3ixT6C3hU
— AIADMK (@AIADMKOfficial) July 11, 2022
மேலும் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமை செயளாலர் என இருந்த தனது பொறுப்பினை, இடைக்கால பொதுச்செயலாளர் என மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அஸ்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்