ETV Bharat / state

நமது அம்மா நாளிதழில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம் - நமது அம்மா நாளிதழ்

நமது அம்மா நாளிதழில் நிறுவனர் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி பெயர் இடம் பெற்றுள்ளது.

நமது அம்மா நாளிதழில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்

author img

By

Published : Jun 27, 2022, 6:31 AM IST

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நமது அம்மா நாளிதழில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்து, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதிக்கு அறிவிக்கப்பட்டது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இரு அணிகளாக செயல்படுகின்றனர். அதிமுகவில் உச்சகட்ட பதவி போர் என அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகிறது. மேலும் 1989ல் ஏற்பட்ட ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி போன்று அதிமுக(எடப்பாடி), அதிமுக(பன்னீர்செல்வம்) அணி உருவாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைக்கு அதிமுகவில் ஈபிஎஸ்க்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதை பார்க்கமுடிகிறது. தொடர்ந்து ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து ஓரம்கட்டும் வேலையில் ஈபிஎஸ் தரப்பினர் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நமது அம்மா நாளிதழில் நிறுவனர் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம் செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி பெயர் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : அதிமுகவில் அடுத்து என்ன? - தெற்கே ஓபிஎஸ், வடக்கே சசிகலா சுற்றுப்பயணம்?!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.