கோவிட்-19 பாதிப்பால் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் திட்டங்களுக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கான திட்டங்களை நேற்று (மே 14) முதல் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு துணை- முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடம் உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. அடுத்த அறிவிப்பில் அவசரமாக நிதி தேவைப்படும் மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை அளிக்கும் அறிவிப்பாக இருக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ’திராவிட ஆட்சியை ஒழிக்க அதிமுக அரசு முன்வர வேண்டும்’- எச்.ராஜா