ETV Bharat / state

'எழுவர் விடுதலையை திமுக நீர்த்துப் போகச் செய்துவிட்டதோ?' - அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர் செல்வம்

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
author img

By

Published : Sep 21, 2021, 7:36 AM IST

Updated : Sep 21, 2021, 8:31 AM IST

ஏழு பேர்‌ விடுதலை விவகாரத்தையும், நீட்‌ விவகாரம் போல திமுக அரசு நீர்த்துப்‌போகச்‌ செய்துவிட்டதோ என்ற எண்ணம்‌ அனைவரிடமும்‌ மேலோங்கி நிற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ. பன்னீர்செல்வம்‌ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜிவ் காந்தி ‌ கொலை வழக்கில்‌ கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர்‌ விடுதலை குறித்து செய்தியாளரிடையே பேசிய தமிழ்நாடு சட்டத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌. ரகுபதியின்‌ பதிலைப்‌ பார்க்கும்போது, 'கழுவுற மீனிலே நழுவுற மீன்‌' என்ற பழமொழிதான்‌ என்‌ நினைவிற்கு வருகிறது.

மக்களாட்சியின் மாண்புக்கு விரோதமானது இல்லையா?

அதிமுக ஆட்சிக்‌ காலத்தில்‌, ராஜிவ் காந்தி கொலை வழக்கில்‌ 30 ஆண்டுகளாக ஆயுள்‌ தண்டனை அனுபவித்துவரும்‌ நளினி, முருகன்‌, சாந்தன்‌, பேரறிவாளன்‌, ஜெயக்குமார்‌, ராபர்ட்‌ பயாஸ்‌, ரவிச்சந்திரன்‌ ஆகியோரை விடுதலை செய்யப்‌ பரிந்துரைத்து 2016 செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற அமைச்சரவைக்‌ கூட்டத்தில் தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து 2019 ஜனவரி 7 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ ஆளுநர்‌ உரைக்கு நன்றி தெரிவிக்கும்‌ தீர்மானத்தின் மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ மு.க. ஸ்டாலின்‌, 'அமைச்சரவையில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டு 116 நாள்கள்‌ கடந்துவிட்டன.

இந்த ஏழு பேரின்‌ விடுதலை குறித்துத் தமிழ்நாடு ஆளுநர்‌ இதுவரையில்‌ எந்த முடிவையும்‌ எடுக்காமல்‌, அதை அப்படியே கிடப்பில்‌ போட்டுவைத்திருக்கிறார்‌' என்று தெரிவித்தும், 'அமைச்சரவையில்‌ எடுத்த முடிவை இப்படிக் காலவரையின்றி ஆளுநர்‌ தன்னிடமே வைத்துக்‌ கொள்வது, மக்களாட்சியின் மாண்புக்கு விரோதமானது இல்லையா' என்று வினவினார்‌.

திமுகவின் அறிக்கையில் எழுவரின் விடுதலை

அதுமட்டுமல்லாமல்‌ இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ ஆளுநர்‌ உரையாற்ற ஆரம்பிக்கும்போது, ஏழு பேர்‌ விடுதலை குறித்து எந்த முடிவும்‌ எடுக்காததை எதிர்த்து, மு.க. ஸ்டாலின்‌ தலைமையில்‌ திமுக உறுப்பினர்கள்‌ வெளிநடப்புச் செய்தனர்‌.

இந்தப்‌ பிரச்சினையில்‌ அதிமுக‌ போதிய அழுத்தம்‌ கொடுக்கவில்லை என்றும்‌ விமர்சனம்‌ செய்யப்பட்டது. இந்தச்‌ சூழ்நிலையில்‌, மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் குடியரசுத்‌ தலைவருக்குத்தான்‌ இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின்‌ பரிந்துரையைக்‌ குடியரசுத்‌ தலைவருக்கு, ஆளுநர் பரிந்துரைத்தார்.

இதன்‌ தொடர்ச்சியாக, ஏழு பேர்‌ விடுதலை குறித்து திமுகவின்‌ தேர்தல்‌ அறிக்கையிலும்‌ குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்‌பேரவைத்‌ தேர்தலுக்குப்‌ பிறகு ஆட்சி மாற்றம்‌ ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின்‌‌ முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர்‌, குடியரசுத்‌ தலைவருக்கு எழுதிய கடிதத்தில்‌, மாநில அரசின்‌ பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்‌கொண்டார்‌.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க ஸ்டாலின்!

முதலமைச்சர் கடிதம்‌ எழுதி 124 நாள்கள்‌ ஆகியுள்ள சூழ்நிலையில்‌, எந்தவித நடவடிக்கையும்‌ இல்லாதது பொதுமக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. இந்தச்‌ சூழ்நிலையில்‌, ராஜிவ்‌ கொலை வழக்கு கைதிகள்‌ ஏழு பேர்‌ விடுதலை தொடர்பாக, முந்தைய ஆளுநரால்‌ குடியரசுத்‌ தலைவருக்குக் கடிதம்‌ அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில்‌, புதிய ஆளுநரிடம்‌ அழுத்தம்‌ கொடுக்க முடியாது என்று சட்ட அமைச்சர்‌ தெரிவித்திருப்பது வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சுவதுபோல்‌ உள்ளது. அமைச்சரின்‌ பேட்டியைப்‌ பார்க்கும்போது, இந்தப்‌ பிரச்சினையையும்‌, நீட்‌ பிரச்சினை‌ போலத் திமுக அரசு நீர்த்துப்‌ போகச்‌ செய்துவிட்டதோ என்ற எண்ணம்‌ அனைவரிடமும்‌ மேலோங்கி நிற்கிறது.

எனவே, முதலமைச்சர் ஒன்றிய அரசுக்குப் போதுமான அழுத்தத்தைக்‌ கொடுத்து, திமுகவின்‌ தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, ஏழு பேர்‌ விடுதலையை உறுதிசெய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்‌கொள்கிறேன்‌’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Last Updated : Sep 21, 2021, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.