ETV Bharat / state

அடுத்தவர் குழந்தையும் தங்களது என ஸ்டிக்கர் ஒட்டாதே விடியா அரசே! - இபிஎஸ் - தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடாமல், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிமுக
அதிமுக
author img

By

Published : Jan 11, 2022, 7:05 PM IST

சென்னை: இது குறித்து அவர் இன்று (ஜனவரி 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவின் 30 ஆண்டு ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், ஆகியவற்றோடு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான குடிநீர், கல்வி, சாலை வசதிகள், வேளாண்மைத் துறை, தொழில் துறை, சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றில் தமிழ்நாட்டை தன்னிறைவு பெற்ற மாநிலமாக்கிய பெருமை, எம்ஜிஆரைச் சேரும்.

அவரைத் தொடர்ந்து, புதிய வீராணம் திட்டம், ஏழை, எளியவர்களுக்கு நியாயவிலைக் கடை மூலம் 20 கிலோ விலையில்லா அரிசி, தடையில்லா மின்சாரம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களைத் தந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, தொடர்ந்து தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் வகையில் குடிமராமத்துத் திட்டம், நெகிழி இல்லா தமிழ்நாடு,

உணவு உற்பத்தியில் தொடர் சாதனை, மருத்துவத் துறையில் தொடர் சாதனை, உயர் கல்வியில் 2030இல் அடைய வேண்டிய இலக்கை 2020லேயே அடைந்து சாதனை, உள்ளாட்சியில் நூற்றுக்கணக்கான விருதுகள், அரசுப் பள்ளி மாணாக்கரும் மருத்துவக் கல்வி படிக்க 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு என்று சாதனைகள் பலபுரிந்த அதிமுக அரசையும், தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.

ஓபிசி 27% இட ஒதுக்கீட்டிலும் அதிமுகதான்...!

தென்றலும், வாடைக் காற்றும் வீசும்போது, இடையிடையே தோன்றும் அனல் காற்றுபோல, அவ்வப்போது சந்தர்ப்பவசத்தால் அமைந்த திமுக அரசு, பொய், பித்தலாட்டங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தைகளைத் தங்களுடையது என்று, எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இப்போதுள்ள இந்த விடியா அரசைக் கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள்.

ஓபிசிக்கு மருத்துவ மேற்படிப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ளது உச்ச நீதிமன்றம். முதன்முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகதான் வழக்குத் தொடுத்தது. இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில், தாங்கள் மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிடுவோமோ என்ற எண்ணத்தில் திமுகவும், பாமகவும் பின் யோசனையுடன் தங்களை இணைத்துக்கொண்டன. (அஇஅதிமுகவின் வழக்கு எண் - 8324, திமுகவின் வழக்கு எண் - 8326, பாமகவின் வழக்கு எண்- 8325) சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் ஓலா நிறுவனத்தை (மின்சார இருசக்கர வாகன உற்பத்தித் திட்டம்) பதவியேற்ற 50 நாள்களில் இந்த விடியா அரசு கொண்டுவந்ததாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது. 2019-2020ஆம் ஆண்டு நிதி-ஆயோக் வெளியிட்டிருக்கும் மாநில சுகாதாரக் குறியீடு கூட்டுக் குறியீட்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த தரவரிசையில் பெரிய மாநிலங்களில் கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துள்ளது.

11 புதிய மருத்துவக் கல்லூரிகள்

மத்திய அரசின் - ஜல்சக்தி அமைச்சகத்தின்- 2020ஆம் ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு மூன்றாம் பரிசு, ஆறு பிரிவுகளில் தேசிய நீர் விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. இதற்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சரிடம், அமைச்சர் துரைமுருகன் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு அதிமுக அரசு செய்த பல சாதனைகளை இந்த விடியா அரசு பட்டியலிட்டுக்கொண்டே செல்வது விந்தையாக உள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அதிமுக அரசு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று கட்டடம் கட்டுவதற்கான நிதியினையும் ஒதுக்கியது.

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களுக்கு நானும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் சில மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களுக்கு அமைச்சர்களும் நேரடியாகச் சென்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டோம்.

புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதன் மூலம் 1450 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏற்கனவே அரசுப் பள்ளி மாணாக்கருக்காக, அதிமுக அரசு கொண்டுவந்த 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக, சுமார் 109 ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற உள்ளது.

அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தையைக் கொண்டாடாதே விடியா அரசே!

நாளை (ஜனவரி 12), பிரதமர் மேற்குறிப்பிட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும் காணொலி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்துவைக்க உள்ளார் என்ற செய்தி அறிந்து உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதிமுக அரசு கோரிக்கை வைத்தவுடன், தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு அனுமதியும், மத்திய அரசின் பங்கையும் வழங்கிய பிரதமருக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை இந்த விடியா அரசு, தான் கொண்டுவந்ததாக ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறது என்று கேள்விப்பட்டேன். இதை அதிமுக சார்பாக கடுமையாகக் கண்டிக்கிறேன். இனியாவது இந்த விடியா அரசு 'அடுத்தவர்கள் பெற்றெடுத்த குழந்தைக்கு சொந்தம் கொண்டாடாமல்', எதையும் தாங்கள்தான் செய்தோம் என்று விளம்பரப்படுத்தும் மோகத்திலிருந்து விடுபட்டு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தனது சொந்த செயல் திட்டங்களை வகுத்து, அவற்றினை நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Holiday for Pongal: பொங்கலுக்கு 5 நாள்கள் தொடர் விடுமுறை - அரசு அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.