சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பதற்காகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெறும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.
கரோனா பரவல் காரணமாகக் கருத்து கேட்கும் கூட்டம் ஒத்திவைப்பு
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கரோனா பரவல் எதிரொலியாக 13ஆம் தேதி நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் இரண்டாவது முறையாக 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால் இன்று நடக்கவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் என மூன்றாவது முறையாகக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எண்ணூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் மூன்றாவது முறையாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வடசென்னையில் 15 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு