மதுரை மாட்டுத்தாவணி மற்றும் திருப்பாலை, தஞ்சாவூர் மாவட்டம், சோழவரம் ஆகிய இடங்களில் ரூ.11 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று (பிப்.13) காணொலி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை, நாமக்கல், தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 91 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 681 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையக் கட்டடங்கள், ராமநாதபுரம் முதுகுளத்தூரில் ரூ.75 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்