இது குறித்து தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து முதன் முறையாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை கடந்த 30ஆம் தேதி சென்னை நந்தனத்தில் நடத்தியது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் என்.ஏ.சி.ஜி. ஜூவல்லர்ஸ், பேங்க் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 89 தனியார் நிறுவனங்களும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,060 பட்டதாரிகள் கலந்து கொண்டனர். இதில் 9 மாற்றுத்திறனாளிகள் உட்பட 321 நபர்களுக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பார்த்தசாரதி பணி நியமன ஆணைகளை வழங்கினார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் முப்பதாயிரம் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் கோயம்புத்தூர், தர்மபுரி, மதுரை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரிசி அட்டைகளுக்கு மாறிய பயனாளிகளுக்கு அரிசி வழங்க ரூ. 604 கோடி ஒதுக்கீடு