ETV Bharat / state

வீடுகளில் மின் இணைப்பு பெற இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்! - தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு

சென்னை: வீடுகளில் தாழ்வழுத்த மின் இணைப்பு பெற இனி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

only be applied in TANGEDCO website to home electrical connection

author img

By

Published : Mar 5, 2020, 11:40 PM IST

தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மான கழகத்தில் தாழ்வழுத்த மின் இணைப்பு ( low tencity ) பெற அதற்கான படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்துச் சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுத்து இணைப்பு பெற வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது. அவ்வாறு தாழ்வழுத்த இணைப்பு கோரும் வாடிக்கையாளர்களிடம் மின் வாரிய அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தாழ்வழுத்த மின் இணைப்பு பெறும்போது ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் இணைப்புகள் பெற விரும்புவோர் இணையத்தில் மட்டுமே தங்களது ஆவணங்களைப் பதிவுசெய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குடிசைகள், விவசாய நிலங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன், துணை ஆவணங்களை ஸ்கேன் செய்து மின் வாரியத்தின் (TANGEDCO) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் மனமுடைந்த தாய் 1 வயது குழந்தையுடன் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.