ETV Bharat / state

ஆன்லைன் தேர்வு வினாத்தாள் பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியீடு

உயர்கல்வித்துறையில் ஆன்லைன் மூலம் பருவத் தேர்வுகள் நடைபெறும் போது, பல்கலைக் கழகங்களின் இணையதளத்தில் கேள்வித்தாள் ஒரு மணி நேரம் வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

author img

By

Published : Jan 25, 2022, 3:55 PM IST

சென்னை: உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் மற்றும் உயர் கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், கல்லூரிக்கல்வி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பல்கலைக் கழக துணைவேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நவம்பர், டிசம்பர் பருவத்திற்கான தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், நடப்பு பருவத்தில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைன் முறையில் நடைபெறும்.

காலை மாலை இரு வேளையும் தேர்வு

காலை, மாலையில் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். அதன்படி, காலையில் 10 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வு நடைபெறும். மாணவர்களுக்குக் கேள்வித்தாளைப் பல்கலைக் கழகங்கள் இணையதளத்தின் மூலமோ, கல்லூரியின் மூலமோ அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய வசதியாகப் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் காலையில் தேர்வு நடைபெறும் போது 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரையிலும் வெளியிட வேண்டும்.

மாணவர்கள் A4 தாள்களில் விடைகளை 40 பக்கங்களுக்குள் எழுத வேண்டும். மேலும் விடைத்தாளின் மேல் புறத்தில் வலது பக்கம் மாணவர்களின் பதிவு எண், பாட எண், பக்கம் எண், தேர்வு மையத்தின் எண் ஆகியவற்றை எழுதி கையொப்பம் இட வேண்டும்.

மாணவர்களுக்குத் தேர்விற்கான வினாத்தாள்களை அனுப்புவதற்குத் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து, வாட்ஸ்ஆப் குழு உருவாக்க வேண்டும். மேலும் மாணவர்கள் வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ததை உறுதி செய்ய வேண்டும்.

வாட்ஸ்அப் மூலம் விடைத்தாள் அனுப்பலாம்

தேர்வு முடிந்த அடுத்த 1 மணி நேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் போன்றவற்றின் வாயிலாகக் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வாரக் காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பத்தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் தேர்வு: போராடிய மாணவர்கள் மீதான வழக்கு ரத்து

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.