சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக வழக்கறிஞரான மணிகண்டன் ஆன்லைன் வாயிலாக டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
இதுவரை ஐந்து மாவட்டங்களில் சுற்றுப் பயணம் முடித்த எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பின் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தை தொடர உள்ளார். ஒரு முன்னாள் முதலமைச்சர் இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு இதுவரை வழங்கவில்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர்களால் ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடப்பாண்டிற்கான நல் ஆளுமை விருதுகள் குறித்த அரசாணை வெளியீடு