ETV Bharat / state

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் : மத்திய அரசு பதில்

author img

By

Published : Jul 6, 2020, 2:05 PM IST

சென்னை : ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஜூலை 15ஆம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

online classes, new guidlines will introduce from mid july , central govt reply to madras high court

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைவதாகவும், எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இதேபோல், ஆன்லைன் வகுப்புகளை மொபைல், லேப்டாப் மூலமாகப் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் மட்டும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து கண் மருத்துவமனை முதல்வரிடம் அறிக்கை பெற்று அளிக்கும்படி முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பிரபாகரன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதில், ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டபடி கண் மருத்துவமனை முதல்வர் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கர நாராயணன், வருகிற ஜூலை 15ஆம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். எனவே வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.