ETV Bharat / state

சட்டப்படிப்பில் சேர்வதற்கு 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - Ambedkar university law study

சட்டப்படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

law study
சட்டப்படிப்பு
author img

By

Published : Aug 1, 2021, 9:18 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் அரசுக்கல்லூரிகளில் 2021 - 2022ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பிஏ எல்எல்பி ஹானர்ஸ், பிஏ எல்எல்பி ஹானர்ஸ், பி.காம் எல்எல்பி ஹானர்ஸ், பிசிஏ எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய சட்டப்படிப்புகளை சீர்மிகு சட்டப்பள்ளியில் படிப்பதற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Law studies
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் அறிவிப்பு

அதேபோல, தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரி மற்றும் திண்டிவனம் சரஸ்வதி சட்டக்கல்லூரி (தனியார்) ஆகியவற்றில் பிஏ எல்எல்பி சட்டப்படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் www.tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வருவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், விவரங்களைப் பெறுவதற்கு 044 24641919, 24957414 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிஇ, பிடெக் படிப்பில் சேர 79,883 மாணவர்கள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.