சென்னை கோயம்பேடு சந்தையைப் பொறுத்தவரையில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகின்றன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக மேற்கு கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் மழையால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது.
மேலும், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் தமிழ்நாட்டில் பெய்த மழையின் காரணமாக அழுகியதால் தற்போது வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, பெரிய வெங்காயம் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை உயர்ந்து, சின்ன வெங்காயம் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரையும் உயர்ந்து விற்கப்படுகிறது.
வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ள காரணத்தாலும் தற்போது முகூர்த்தநாள் என்பதாலும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது என்றும் இன்னும் ஓரிரு தினங்களில் வெங்காய விலை குறையும் எனவும் வியாபரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'விஷ வண்டு கடித்து உயிரிழந்த புதுவை அதிமுக செயலாளர்' - முதலமைச்சர் பழனிசாமி நேரில் அஞ்சலி!