சென்னை: தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்த்தின் என்பவர் குட்கா விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மொத்த விற்பனையாளரான மங்கல்ராம் (29), சிவபெருமாள் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய காரில் இருந்து, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல படப்பை அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,300 கிலோ குட்கா பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்ய பட்ட மூன்று பேரும் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி தாம்பரத்தில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது