சென்னை: கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, ஒரு தனியார் நிறுவன சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகப் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று(நவ-21) கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி, இணைய வழியில் நுழைந்து, செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிறுவனத்தின் மேலாளர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு