சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்ட செயலாக்கம் குறித்து கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் சோதனை அடிப்படையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பான குறை, நிறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் இதனை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடெங்கும் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குதல் தொடர்பாகவும் இதில் உள்ள சிரமங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'தரவில்லாத அரசு' என மத்திய அரசை கடுமையாக விமர்சித்த கனிமொழி