ETV Bharat / state

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது - Hijau Company fraud

ஹிஜாவு நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் மேலும் ஒரு முக்கிய நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹிஜாவு நிறுவன  ஹிஜாவு நிறுவன மோசடி  ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு  மோசடி வழக்கு  Hijau Company fraud case  Hijau Company  Hijau Company fraud  ஹிஜாவு நிறுவனம்
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு
author img

By

Published : Dec 8, 2022, 6:09 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 15% வட்டி தருவதாகக் கூறி மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிஜாவு நிறுவனம், சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி நூற்றுக்கணக்கானோர் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார், மேற்கொண்ட விசாரணையில் ஹிஜாவு நிறுவனம் இணையதளம் (www.mypayhm.com) மூலம் வாடிக்கையாளர்களுக்கு உறுப்பினர் எண் கொடுத்து, ஆன்லைன் மூலமாகவே வாடிக்கையாளர்களின் கணக்குகளை கையாண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த இணையதளம் மூலமாக எவ்வளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு வட்டி வருகிறது? உள்ளிட்ட விவரங்கள் தெரிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ததும், ஏராளமானோர் முதலீடு செய்த நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலானோர் ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதும் தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்டு வந்த சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த நேரு (49) என்பவரை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்து வரும் ஹிஜாவு குழுமத்தின் தலைவர் சௌந்தரராஜன், நிர்வாக இயக்குநர் அலெக்ஸாண்டர் ஆகியோர் மீது கடந்த 15ஆம் தேதி பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை பொய்யாக புனைந்து குற்றச்செயலில் ஈடுபடுதல் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக இருந்து வரும் நபர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும்; பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக ஹிஜாவு நிறுவனத்துக்குச் சொந்தமான 21 இடங்களில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி ரசீதுகள் உள்ளிட்ட வழக்குத் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய நபரான கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (51) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் ஹிஜாவு நிறுவனத்தின் குழு உறுப்பினராக இருந்து, பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தில் ஹிஜாவு கிளை நிறுவனம் ஒன்றை மணிகண்டன் தொடங்கி உள்ளார்.

தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மூலமாக சுமார் 350-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மணிகண்டன் மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் மணிகண்டன் பல லட்சம் கமிஷன் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மணிகண்டனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஹிஜாவு நிறுவன மோசடி தொடர்பாக புதிதாக புகார் அளிக்க விரும்புவோர் hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 56 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.