ETV Bharat / state

சூடானில் இருந்து மேலும் 9 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு - Senji Masthan

சூடானில் இருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த மேலும் 9 தமிழர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

சூடானில் இருந்து மேலும் 9 தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

author img

By

Published : Apr 29, 2023, 5:28 PM IST

சூடானில் இருந்து மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த மேலும் 9 தமிழர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்

சென்னை: சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள சூழலில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலக தமிழர் நலவாழ்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று (ஏப்ரல் 29) அதிகாலை 1 மணியளவில் டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் மேலும் 9 தமிழர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். இதன்படி சென்னை விமான நிலையம் வந்தடைந்த சென்னை ஐயப்பன் தாங்கல் மற்றும் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி அய்யாதுரை,

சரத்குமார் சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் முத்துசாமி, நிதிலன் வெங்கடேசன், தீபா வெங்கடேசன், தவசீலன் ஆணை முத்து மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பிறை சூடன் தினேஷ், கவியரசி தர்மலிங்கம், தினேஷ் கோவிந்தராஜ் ஆகிய 2 பெண்கள் உள்பட 9 பேருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “சூடானில் இருந்து இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் சூடான் நாட்டில் உள்ள தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த நாட்களில் டெல்லி, மும்பை வழியாக தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். டெல்லியில் இருந்து தமிழ்நாடு அரசு செலவில் விமானங்களில் சென்னை, மதுரை ஆகிய இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு வாகனங்களில் அனுப்பி வைத்து இருக்கிறோம். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது” என கூறினார்.

தொடர்ந்து மீட்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கும் இருக்கும் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத அளவு துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு போன்றவை தொடர்ந்து நடந்து வந்தது. மத்திய, மாநில அரசின் துரித நடவடிக்கையால் நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து வரப்பட்டு உள்ளோம்.

டெல்லி வந்த எங்களை மத்திய, மாநில அரசுகள் நல்ல முறையில் வரவேற்றது. மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனி வெளிநாட்டுக்குச் சென்று வேலைக்கு செல்லும் எண்ணமே எங்களுக்கு கிடையாது. அடுத்த நாட்களில் மீதம் உள்ள தமிழர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள்” என தெரிவித்தனர்.

மேலும், சூடானில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்படும் தமிழர்களை, தமிழ்நாடு அரசு அதிகாரிகள், டெல்லி விமான நிலையத்தில் வரவேற்று, தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கின்றனர். அதன்பின்பு, தமிழ்நாடு அரசின் செலவில், அவர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Operation Kaveri : போர் முனையில் சிக்கிய இந்தியர்கள் மீட்பு! 1,500 இந்தியர்கள் நாடு திரும்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.