ஆர்.கே. நகர் பகுதிக்கு உள்பட்ட கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஹயாத் பாஷா (37). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
இவர் கொருக்குப்பேட்டை காந்திநகர் பகுதியில் உள்ள கோழிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு (மார்ச்3) ஹயாத் பாஷா கோழி இறைச்சி அரவை மிஷினை சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவினால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஹயாத் பாஷா உயிரிழந்தார்.
இது குறித்து ஆர்கே நகர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் ரூ. 4.60 கோடி கடன் பெற முயன்ற தொழிலதிபர் கைது!