சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக் 18) 2ஆம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கேள்விகள் கேட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் உடனடியாக ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை அவையில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இந்த நிலையில் தொடர்ந்து வாக்குவாதம் செய்து அமளியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் தடை விதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதனை ஒரு நாளாக குறைக்குமாறு அவை முன்னவர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். அதன்படி ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து ஒரு நாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் - சபாநாயகர் அப்பாவு