சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, "இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் பொதுப் பிரிவில் ‘இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் ‘இந்திய ஏ அணியும்’ பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய பி அணிக்கும்’, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி (பெண்கள்)’ ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஆராதனா சிவகார்த்திகேயன்!