ETV Bharat / state

ஜூலை 14-ல் திமுக MP-க்கள் ஆலோசனைக் கூட்டம்; விவாதத்தில் இடம்பெறுபவை யாவை? - விவாதத்தில் இடம்பெறுபவை யாவை

வரும் ஜூலை 14ஆம் தேதி திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கும் நிலையில் அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விவகாரங்கள் என்னென்ன? என்று கேள்வியெழுந்துள்ளது.

DMK MPs Consultative Meeting
Etv Bharat
author img

By

Published : Jul 10, 2023, 3:53 PM IST

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இதில், நாடாளுமன்றக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

சமீபகாலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் (MK Stalin vs RN Ravi) பனிப்போர் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர முடியாது என அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ஆளுநர் (Hold of Minister V Senthil Balaji dismissal order) பின்னர் நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்தார். இதனையடுத்து, 'இந்தியாவிற்கே இன்று பேராபத்து வந்துள்ளது. அதிலிருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சித்து வருகிறோம். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ‘அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்’ : ஆளுநரை எதிர்த்து மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

ஆளுநர் குறித்து மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம்: மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்வு செய்யப்பட்ட திமுக அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார் என்றும்; ஆளுநர் பதவிக்கு ஆர்.என்.ரவி தகுதி இல்லாதவர் என்றும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு (Droupadi Murmu) முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய (ஜூலை 9) தினம் கடிதம் எழுதியிருந்தார். அதில், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை தவறானது என்றும், அதனால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

விவாதிக்கப்பட உள்ளவை: இந்த நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், டெல்லி அவசர சட்ட விவகாரம், மணிப்பூர் விவகாரம் (Manipur Violence), பொது சிவில் சட்ட விவகாரங்களை சக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வலியுறுத்துதல், அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, நீட் தேர்வு ரத்து (NEET Exam) உள்ளிட்டவற்றை வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் பணி, கருணாநிதி நூற்றாண்டு விழா (Karunanidhi Centenary Birthday), நாடாளுமன்றத் தேர்தல் முன் தயாரிப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் தோல்வி பயமே குடியரசுத்தலைவரிடம் புகார் அளிக்க காரணம் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.