சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் தம்பதிக்கு 6,10 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நவம்பர் 30ஆம் தேதி மாலையில் இரு சிறுமிகளும் வீட்டிலிருந்து டியூசனுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
பின்னர் இரவு டியூஷன் முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி(73) என்பவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து இரு சிறுமிகளும் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதைத் தெரிந்த சுந்தரமூர்த்தி அந்த சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் சிறுமிகளின் பெற்றோர்களிடம் கூறவே, செவ்வாய்க்கிழமை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ரமணி தலைமையில் காவல்துறையினர் சுந்தரமூர்த்தியைத் தேடிவந்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பேருந்தில் இளைஞர் பெண்ணிடம் அத்துமீறிய காணொலி வைரல்.!