சென்னை உள்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்திவருவதால் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தனது மகளைச் சந்திக்க அமெரிக்கா சென்ற மாம்பலம் பகுதியைச் சேர்ந்த பகவதி (75), நேற்று விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.
அவரை விமான நிலையத்தில் பரிசோதித்தபோது அவருக்கு கரோனா தொற்று அறிகுறி உள்ளதாகக் கூறி தாம்பரம் சானடோரியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்று மருத்துவரிடம் கூறாமல் மருத்துவமனையைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
பகவதி குடியிருக்கும் அதே குடியிருப்பில் வசிக்கும் நபர் இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். இதனையடுத்து பகவதி வீட்டிற்கு வந்த காவல் துறையினரை அவரைக் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கரோனா அறிகுறி காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த மூதாட்டி மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'டெல்லியிலிருந்து வந்தவருக்கு கரோனா தொற்றிய காரணம் தெரியவில்லை' - விஜய பாஸ்கர்