ETV Bharat / state

சென்னையில் கட்டடம் இடிந்து விழுந்து பெண் பலி: மருந்து வாங்க சென்ற போது நேர்ந்த சோகம் - பழமையான கட்டிடம்

சென்னையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

author img

By

Published : Nov 5, 2022, 9:09 AM IST

சென்னை: சௌகார்பேட்டை மிண்ட் தெருவில் சத்ரதாஸ் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. 100 ஆண்டு பழமையான இந்த வீட்டின் தரைதளத்தில் செல்போன் ரிசார்ஜ் கடை, மருந்தகம் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 6.30 மணியளவில் வீட்டின் முதல் தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் மருந்து கடையில் மருந்து வாங்க வந்த பெண் ஒருவர் இடர்பாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவ்வழியாக நடந்து சென்ற ஒருவருக்கு பலத்த காயமும், இருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் உடனே தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், யானைக்கவுனி காவல்துறையினர் மற்றும் வண்ணாரப்பேட்டை, எஸ்பிளனேடு ஆகிய பகுதியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனத்தில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

பின்னர் இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த நபர் உட்பட மூவர் மீட்கப்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து யானைகவுனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் சௌகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கங்குதேவி(60) என்பதும், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள மருந்தகத்திற்கு மருந்து வாங்க வந்த போது கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் படுகாயமடைந்த நபர் பெரும்பாக்கத்தை சேர்ந்த சங்கர்(36) என்பதும் காயமடைந்தவர் சரவணன் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பழமையான கட்டடம் என்பதால் இடிந்து விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சேதமடைந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். விபத்து தொடர்பாக யானைகவுனி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட வழக்கு - ஈரோடு ஆட்சியர் அலுவலகப் பொருள்கள் ஜப்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.