சென்னை திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் திசைகரபாண்டியன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து ஒய்வு பெற்றவர்.
இந்நிலையில் இன்று (மே 8) காலை அவர் வீட்டில் இருந்து ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சைக்கிளில் சென்றிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதைபார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சாலை ஓரத்தில் அமர வைத்து முதலுதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர் அவரை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து திருவொற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் திசைகரபாண்டியனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.