சென்னை: மகாத்மா காந்தி நினைவுதினம் நாளை (ஜனவரி 30) அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில், “தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை கடைபிடிக்க மாட்டேன் என்றும், சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது என் கடமை” என முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து தலைமைச் செயலக அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!