ETV Bharat / state

ஆகாயத்தாமரையால் உபரி நீரை நிறுத்த முடியாமல் அலுவலர்கள் திணறல்! - Nivar cyclone

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளின் இடையில் ஆகாயத்தாமரை செடிகள் சிக்கிக் கொண்டதால், உபரி நீரை நிறுத்த முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.

sembarambakkam lake
Chennai
author img

By

Published : Nov 29, 2020, 7:51 PM IST

கிருஷ்ணா நதி நீர், வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் தாக்கம் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், நவம்பர் 25ஆம் தேதி முதல்கட்டமாக ஆயிரம் கனஅடி உபரிநீர் மதகுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது.

மேலும், ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அதிகபட்சமாக 9 ஆயிரம் கனஅடி வரை ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த மூன்று தினங்களாக மழை நின்ற நிலையிலும், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வந்ததால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, ஏரிக்கு நீர்வரத்து நேற்று (நவம்பர் 29) நின்றது. சில இடங்களில் பெய்த மழை காரணமாக ஏரிக்கு 350 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த 350 கனஅடி நீரை அலுவலர்கள் வெளியேற்றி வருகின்றனர். ஐந்து கண் மதகுகள் வழியாக உபரி நீரை வெளியேற்றும்போது செம்பரம்பாக்கம் ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள், முற்றிலும் அடித்து வரப்பட்டு ஷெட்டரில் சிக்கிக் கொண்டது. இதனை வெளியேற்ற பொதுப்பணித்துறை அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, தற்போது பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு ராட்சத மிதவை படகுகளை ஏரிக்குள் இறங்கி, அதன் மூலம் ஷெட்டரில் சிக்கியுள்ள கொடிகளை அகற்றுவதற்கு அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாகவும், கொள்ளளவு 3120 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 350 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 350 கன அடியாகவும் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.