சென்னை கிரீன்வேஸ் சாலையில், கடந்த பத்தாண்டுகளாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அரசு பங்களாவான தென்பெண்ணை இல்லத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வசித்து வந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன்.4) அந்த இல்லத்தைக் காலி செய்து, தியாகராயநகரில் உள்ள புதிய வீட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் மாறியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அரசு பங்களாவில் தங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.