ETV Bharat / state

சபாநாயகர் சொல்வது மட்டுமே அவைக்குறிப்பில் பதிவாகும் - ஓபிஎஸ்

சட்டமன்றத்தில் சபாநாயகர் சொல்வது மட்டுமே அவைக்குறிப்பில் பதிவாகும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் சொல்வது மட்டுமே அவைக்குறிப்பில் பதிவாகும் - ஓபிஎஸ்
சபாநாயகர் சொல்வது மட்டுமே அவைக்குறிப்பில் பதிவாகும் - ஓபிஎஸ்
author img

By

Published : Mar 23, 2023, 6:11 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20அன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்றைய முன்தினம் (மார்ச் 21) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 2023 - 2024ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து சட்டமன்ற அலுவல் கூட்டம், மார்ச் 20ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன் முடிவில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வருகிற மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

மேலும் இந்த விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களில் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதேநேரம் சட்டப்பேரவை 15 நாட்கள் காலையிலும், 7 நாட்கள் மாலையிலும் நடைபெறும் எனவும் அறிவித்தார். நேற்று (மார்ச் 22) யுகாதி என்னும் தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச் 23) அவை மீண்டும் கூடியது. இதில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் இது விரைவில் ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. அதேநேரம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் ஜெகன் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கு விசாரணையின்போது அதிமுக கிளைச் செயலாளராக இருக்கும் சங்கர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அனைத்துக் கட்சிகளும் மனித நேயத்தைப் பேணிக் காக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனிடையே ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பேச ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பேரவையில் சபாநாயருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ''சட்டப்பேரவையில் அவைத்தலைவரே அதிகாரம் கொண்டவர். சட்டப்பேரவையைப் பொறுத்தவரை சபாநாயகர் சொல்வதே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படும். மற்றவை பதிவு செய்யப்படாது'' எனக் கூறினார்.

அதேநேரம் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர், ''அவைத்தலைவரின் செயலால் சட்டமன்றத்தின் மரபு மீறப்பட்டுள்ளது. கொறடா உத்தரவு இல்லாமல் யாரும் அவையில் பேச முடியாது. மேலும் அதிமுகவினரை குழப்பும் வகையில் திட்டமிட்டு இவ்வாறு செய்துள்ளனர். யாருடைய தூண்டுதலால் சபாநாயகர் இவ்வாறு செயல்பட்டார் என்பது அனைவருக்குமே பட்டவர்த்தனமாகத் தெரியும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Online Rummy : ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.