ETV Bharat / state

எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர் துரைமுருகன் - ஓபிஎஸ் - அமைச்சர் துரைமுருகன்

'அனைத்து ஆற்றல்களும் கொண்ட துரைமுருகன் 50 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளவர். அவருக்கு அதிமுகவின் இதயம் கனிந்த வாழ்த்துகள்' என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்
author img

By

Published : Aug 23, 2021, 12:25 PM IST

Updated : Aug 23, 2021, 1:06 PM IST

நீர்வளத் துறை அமைச்சரான துரைமுருகனுக்கு சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் கடந்ததால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், "சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள் என்பது நீண்ட நெடிய வரலாறு. ஒருமுறை இருமுறை அல்ல பத்துமுறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் துரைமுருகன்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டக்கூடிய ஒரு உயர்ந்த உள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான் துரைமுருகன். எல்லோரிடத்திலும் பற்றுடனும் பாசத்துடன் பேசக்கூடியவர்.

எம்ஜிஆரிடத்தில் அன்பும், பற்றும் கொண்டவர், கருணாநிதியிடத்தில் விசுவாசம் மிக்கவர். சட்டப்பேரவையில் வாதங்கள் வரும்போது சூடாகவும், அடுத்த விநாடியே இனிமையாகவும் பேசும் ஆற்றல் கொண்டவர்.

அனைத்து ஆற்றல்களும் கொண்ட துரைமுருகனுக்கு அதிமுகவின் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: எனக்கு எல்லாமுமே கருணாநிதிதான் - கண்கலங்கிய துரைமுருகன்

Last Updated : Aug 23, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.