ETV Bharat / state

'இரும்புச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு இலவச மருந்துகள்' - அமைச்சரிடம் கோரிக்கை - request minster

சென்னை: இரும்புச் சத்து குறைபாடுள்ள கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திவ்யா சத்யராஜ்
author img

By

Published : Mar 8, 2019, 3:20 PM IST

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், அட்சய பாத்திரம் என்ற அறக்கட்டயைின் துாதராக இருந்து வருகிறார். இந்நிலையில், ஊட்டச்சத்து நிபுணரான இவர் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“மதிப்பிற்குரிய சுகாதாரத் துறை அமைச்சர் உயர்திரு.விஜயபாஸ்கர் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜின் கோரிக்கை.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் கர்ப்பிணி பெண்களில் ஐந்தில் இரண்டு பெண்கள் வீதம் இரும்புச் சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஏப்ரல் 2018-லிருந்து மார்ச் 2019 வரை ஆயிரக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இரும்புச்சத்து குறைபாடு கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு வரும் இரும்புச் சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக இரும்புச் சத்து உள்ள மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Intro:Body:

march-8-World-womens-day-celeberated

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.