ETV Bharat / state

’சத்துணவு ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்’

சென்னை: சத்துணவு ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்துணவு ஊழியர்கள்  சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை  முன்களப் பணியாளர்கள்  சத்துணவு ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள்  Nutrition staff  Nutrition staff Demanding  Nutrition staff are frontline staff
Nutrition staff Demanding
author img

By

Published : May 21, 2021, 4:53 PM IST

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நூர்ஜஹான், மாநிலத் தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா தொற்றுக்காலத்தில் நோயாளிகள் கணக்கெடுப்பு பணி, செக்ஸ்போஸ்ட் பணி, இதர பணிகளுக்கு ஊழியர்கள் ஒரு சில மாவட்டங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி கட்டாயமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையில் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொது மக்களுக்கு உணவு சமைத்து வழங்கினர். அதில் திருவண்ணாமலை,நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு, அமைப்பாளர்கள் தங்கள் சொந்தப் பணத்தைக் கொண்டு உணவு தயாரித்தனர். இத்தொகை அவர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்துணவு ஊழியர்கள்  சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை  முன்களப் பணியாளர்கள்  சத்துணவு ஊழியர்கள் முன்களப் பணியாளர்கள்  Nutrition staff  Nutrition staff Demanding  Nutrition staff are frontline staff
சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்

மேலும் தற்போது திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், திருவள்ளுர் உள்ளிடட மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு எந்தவித பாதுகாப்பும், அதற்கான உபகரணமும் வழங்கப்படாத நிலையில், வீடுவீடாகச் சென்று கரோனா தொற்று தடுப்பு பணிகளில் அவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதும், பெண் ஊழியர்கள் மிகவும் பயப்படுகின்ற சூழ்நிலையில் செயல்படுவதும் நடைபெற்று வருகிறது.

எனவே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எங்களுக்கும் செய்து கொடுத்தால் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே சத்துணவு ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் சேலைகளைக் கொண்டு கூடாரம் அமைத்து போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.