ETV Bharat / state

மூதாட்டிக்கு மருத்துவம் அளிக்கச் சென்ற வீட்டில் செவிலி தூக்கிட்டுத் தற்கொலை! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: மூதாட்டிக்கு மருத்துவம் அளிக்கச் சென்ற வீட்டில் செவிலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nurse suicide in Chennai
Nurse suicide in Chennai
author img

By

Published : Aug 28, 2020, 8:46 AM IST

சென்னை மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிகா (21). இவர் வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் செவிலியாகப் பணிபுரிந்துவந்தார். பெரவள்ளூர் பகுதியில் வசித்துவரும் ஆறுமுகம் என்பவரின் தாயார் கௌசல்யா (75) உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தினமும் அவரை வீட்டிற்குச் சென்று கவனிக்க செவிலி ஜோதிகா நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து ஜோதிகா தினமும் பெரவள்ளூரில் உள்ள ஆறுமுகம் வீட்டிற்குச் சென்று கௌசல்யாவிற்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்துவந்தார்.

இந்நிலையில் நேற்று (ஆக. 27) காலை ஆறுமுகம் தாயார் கௌசல்யாவின் அறைக்குச் சென்றபோது மின்விசிறியில் ஜோதிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகப் பெரவள்ளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜோதிகாவின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் ஜோதிகா இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் காணொலி பதிவிட்டு உயிரிழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.