சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் கரோனா பாதிப்பு தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகின்றன.
நேற்று (ஏப்.7) மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் 1,400க்கும் குறைவாகவே உள்ளன. கரோனா தொற்றுப் பரவும் பகுதியில், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களை நடத்துவது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், அண்ணா நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தமாக 28 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 26 ஆயிரத்து 335 நபர்கள் குணமடைந்துள்ளர். நேற்று மட்டும் 169 நபர்கள் அந்த மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையிலும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 10 ஆயிரத்து 685 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 4, 286 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், மண்டல வாரியான பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளன.
அண்ணா நகர் - 28,051
கோடம்பாக்கம் - 27,511
தேனாம்பேட்டை - 25,005
ராயபுரம் - 22,185
அடையாறு - 20,550
திரு.வி.க. நகர் - 20,380
தண்டையார்பேட்டை - 18,767
அம்பத்தூர் - 18,493
வளசரவாக்கம் - 16,252
ஆலந்தூர் - 10,925
பெருங்குடி - 9,805
திருவொற்றியூர் - 7,462
மாதவரம் - 9,207
சோழிங்கநல்லூர் - 6,786
மணலி - 3,955