தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 600 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு அதிதீவிரமடைந்துள்ளது. சென்னையில் நேற்று (மே 8,2020) ஒரே நாளில் மட்டும் 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,043ஆக உயர்ந்தது.
இதில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் பகுதியில் 546 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அப்பட்டியல் பின்வருமாறு:
மேலும், 390 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உள்ளது.
இதையும் படிங்க: மதுக்கடைகளை திறந்த அரசு, வழிபாட்டு இடங்களை திறக்கக்கூடாதா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!