ETV Bharat / state

சீமான் தொடர்ந்த வழக்கு! நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு! - சீமான் தொடர்ந்த வழக்கு

Seeman - Vijayalakshmi Case: நடிகை அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ntk-seeman-petition-filed-quash-case-against-him-mhc-order-to-actress-vijaylakshmi-appear
சீமான் மீதான வழக்கில், நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 1:37 PM IST

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவில், நடிகை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு மனுவினை தாக்கல் செய்து இருந்தார். அதில், "கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுவதாகக் கூறி ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல் துறையினர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

கடந்த முறை நீதிமன்ற விசாரணையின் போது சீமான் தரப்பில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், காவல்துறை வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனவும்,

இதையும் படிங்க: Thirumavalavan : திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் அரசியல் ரீதியாகக் கருத்துக்களைக் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2011ல், முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்குப் பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். எனத் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2011ல் அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்பப்பெற்றநிலையில், வழக்கை காவல்துறை நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த மனு, இன்று (செப்.26) நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, புகாரளித்த நடிகை விஜயலட்சுமி எந்த அடிப்படையில் புகாரைத் திரும்பப் பெற்றார்? என விளக்கத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் மேலும் வழக்கின் தன்மை குறித்து ஆய்வு செய்ய நடிகை விஜயலட்சுமி செப்டம்பர் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: திருப்பூரில் வடமாநில பெண் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.