சென்னை: டிப்ளமோ, இளநிலை பிஎஸ்சி பட்டப்படிப்பினை முடித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் காலியாக உள்ள பிஇ(BE), பிடெக் (B.Tech)பட்டப்படிப்பில் நேரடியாக நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள தகவலில், 'டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் , அண்ணாமலை பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேராமல் இருந்ததால், 2 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களில் நேரடியாக சேரலாம்.
இதையும் படிங்க: wrestlers protest update: மல்யுத்த வீரர்கள் போராட்டம்..உ.பியில் இன்று மகா பஞ்சாயத்து!
மேலும், விண்ணப்பம் செய்ய விரும்பும் மாணவர்கள் www.tnlea.com, www.accet.co.in ஆகிய இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பத்து, சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இரண்டாமாண்டு பி.இ., பி.டெக் படிப்பிற்கான கலந்தாய்வு இணையதளம் மூலமாக நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு; சிறப்பு பிரிவில் 10,316 மாணவர்கள் சேர்க்கை