ETV Bharat / state

அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ்… அமைச்சர் நாசர் அதிரடி.. - பால் விநியோகப்பதில் தாமதம்

கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த சுமார் 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 15, 2023, 7:05 PM IST

சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பால் தட்டுப்பாடு நிலவுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு உள்ளது என்றும் ஆவின் பால் கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் என்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உள்பட பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தோல் கழலை நோய் காரணமாக வட மாநிலங்களில் கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் பால் உற்பத்தி குறைந்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் மட்டும் பால் கொள்முதல் குறைந்து விட்டதாக கூறுவது பொய்யான செய்தி ஆகும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், ”கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்திக்கு உரிய விதிகளை மீறி அண்டை மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்த 2 ஆயிரம் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட சங்கங்கள் பால் விற்பனை செய்தது பற்றி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சங்கங்கள் கலைக்கப்படும். மேலும், வடமாநிலங்களில் தோல் கழலை நோயினால் பல கறவை மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இந்நோய் பரவுவது தடுக்கப்பட்டது.

அண்டை மாநிலத்தினர் தமிழக எல்லையோர மாநிலங்களில் இருந்து, தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் அதிகளவில் பணம் கொடுத்து பால் வாங்கியதால் சில தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பால் தட்டுப்பாட்டை போக்க நாளை பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பால் விநியோகிக்கும் லாரி ஓட்டுனர்களில் ஒரு சில வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகைக்காக விடுமுறையில் சென்றதால் கடந்த சில நாட்களுக்கு முன் லாரிகளில் பால் விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிலை சீர் செய்யப்பட்டுள்ளது. சீரான பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: "2 மாவட்டத்தையாவது நேரில் பாருங்க".. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.