ETV Bharat / state

சொத்து வரி கட்டாத 200 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! - Notice to 200 private schools in tamil nadu

சொத்து வரி கட்டாத 200 தனியார் பள்ளிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
author img

By

Published : Mar 23, 2022, 12:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி கட்டாத 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சீல் வைக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதில் சிரமப்பட்ட நிர்வாகங்கள் உள்ளாட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளியை ஜப்தி செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி, தூத்துக்குடி நகராட்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு சொத்துவரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூல் செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகளும் சொத்து வரி கட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனால் தற்பொழுது உள்ளாட்சி அமைப்புகள் தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரியை கட்ட வேண்டும் என பள்ளிகளின் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி கட்ட வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சொத்து வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக பெற்றாேர்கள் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்தாமல் உள்ள நிலையில், உள்ளாட்சி துறையின் நடவடிக்கை பெரும் அச்சத்தை அளிப்பதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

சொத்து வரி கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகள் சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவுரவமாக, பிச்சை எடுத்து கூட நடிகர் சங்க கட்டட பணிகளை நிறைவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.