ETV Bharat / state

இந்தியாவிற்கான நார்வே நாட்டுத் தூதுவர் அமைச்சர் வேலுவுடன் சந்திப்பு - அமைச்சர் எவ வேலு

இந்தியாவிற்கான நார்வே நாட்டுத் தூதுவர் இன்று மரியாதை நிமித்தமாக அமைச்சர் வேலுவுடன் சந்தித்துப் பேசினார்.

அமைச்சர் வேலு
அமைச்சர் வேலு
author img

By

Published : Aug 4, 2022, 9:11 PM IST

சென்னை: இந்தியாவிற்கான நார்வே நாட்டுத் தூதுவர் ஹான்ஸ் ஜேக்கப் ஃப்ரைடன்லண்ட் இன்று (ஆக. 04) தலைமைச் செயலகத்தில் சிறு துறைமுகங்கள் தொடர்பாக நெடுஞ்சாலைகள் பொதுப்பணிகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலுவைச் சந்தித்து விவாதித்தார்.

மேக்னல் கார்ல்சன் என்ற நார்வே நாட்டு செஸ் விளையாட்டு வீரர் (Grandmaster) சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற்று விளையாடி வருகிறார். அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சென்னை வந்த நார்வே நாட்டு தூதுவர் மரியாதை நிமித்தமாக அமைச்சரை சந்தித்து உரையாடினார்.

இவ்வுரையாடலின்போது, பசுமை கடல், கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடலோர கப்பல் போக்குவரத்து அடிப்படையிலான கப்பல் போக்குவரத்து மேலாண்மை ஆகியவை குறித்து விவாதித்தார்கள். தமிழ்நாட்டினுள்ள சிறு துறைமுகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கி கூறினார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.