சென்னை அடுத்த பம்மல் பிரதான சாலையில் கஞ்சா விற்பனை செய்யபட்டு வருவதாக சங்கர் நகர் காவல் துறையினக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சாலையில் சந்தேகம்படும் வகையில் நின்றுகொண்டிருந்த வடமாநிலத்தவரை பிடித்துச் சோதனை செய்த போது அவர் வைத்திருந்த கைப்பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாபொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து விசாரனை மேற்கொண்டனர். அதில், மேற்க்கு வங்கத்தைச் சேர்ந்த பிண்டு சேக் (வயது 28) என்பதும் கொல்கத்தாவில் இருந்து கஞ்சா எடுத்து வந்து 10 நாள்களாக இங்குள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பத்து கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!