சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி ஒவ்வொரு கட்சி சார்பில் அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், அதிமுக சார்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் வடசென்னை பகுதிகளுக்கு உட்பட்ட ஆர்கே நகர், தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவார்கள், விடுபட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, வாக்காளர் பெயர் சரியாக உள்ளதா போன்றவற்றை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த வாக்காளர் சரிபார்ப்பு பணியில் அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் சுட்டிக்காட்டிய திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருந்தது? விளக்குகிறார் டி.ஆர். பாலு