சென்னை தண்டையார்பேட்டையில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான அலுவலக திறப்புவிழா நடைபெற்றது. வடசென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுத்த இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்த விழாவிற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கலாநிதி வீராசாமி, "வடசென்னை தொகுதியில் மக்களவை அலுவலகம் இல்லை என்று மக்கள் பலரும் வருத்தத்தில் இருந்தனர். மாநகராட்சியிடமிருந்து அலுவலகத்திற்கான இடத்தைப் பெற்று அதை சீர் செய்வதற்கு காலதாமதம் ஆகிவிட்டது.
இனிமேல் இந்த அலுவலகம் மக்களின் குறைகளை கேட்க காலை முதல் இரவு வரை திறந்திருக்கும். மக்கள் இங்கு வந்து குறைகளை கூறலாம்" என்று தெரிவித்தார்.