அம்பத்தூரில் உள்ள காமராஜர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைப்பெற்றது. விழாவில் பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், மற்றும் அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா. பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முகப்பேர், அம்பத்தூர், கொரட்டூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1927 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அடுத்த வார இறுதிக்குள் 35 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கபடும்
. இதுவரை 5,47,200 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கபட்டுள்ளன. 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் மூன்றுமாத காலங்களில் விலையில்லா மடிகணினி வழங்கப்படும்.
எந்த பள்ளியிலும் ஆசிரியர் தட்டுபாடு என்பது இல்லை. ஆசிரியர் பெற்றோர் கழகத்தினர் சேர்ந்து 10 ஆயிரம் சம்பளத்தில் படித்த இளைஞர்களை ஆசிரியர் பணியில் சேர்க்கலாம். 1650 கூடுதல் ஆசிரியர்கள் இருப்பதால் ஆசிரியர் இல்லை என்ற நிலை எங்கேயும் இருக்காது", என்றார்.